எதிர் வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக வேண்டி மக்களை விழிப்பூட்முமம் நிகழ்வு ஒன்று சனிக்கிழமை காலை (01) மட்டக்களப்பு திக்கோடையில் நடைபெற்றது.
மனித உரிமைகள் இல்லமும், திக்கோடை பாரதி இளைஞர் கழகமும் இணந்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
இதன்போது உறவுகளே! உங்கள் உரிமையை பலத்தை நிலைநாட்ட சரியான பிரதிநிதியைத் தெரிவு செய்யுங்கள், நாம் உரிமை கேட்பது தவறா?
உரிமையயோடு வாழ்வது தவறா? உங்கள் பிரதிநிதி ஏற்றுக் கொள்வாரா? உங்களில் ஒருவர் வாக்களிக்காவிட்டால்கூட பொருத்தமான பிரதிநிதி தோற்கடிக்கப்படலாம்.
கடந்தகாலத்தை மதித்து எதிர்காலத்தைப் பாதுகாப்பவரே உங்கள் தெரிவாகட்டும். சிந்தித்து வாக்களியுங்கள்.
உங்கள் பிரதிநிதி பாதுகாப்பாரா, பிரதேச நலன் சூழல், சிறவர், பெண்கள் உரிமைகள், பேச்சு ஒன்று கூடும் சுதந்திரம். போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுதங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment