அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் பசுமாடுகளை மிகவும் நெருக்கமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணித்த குற்றச்சாட்டின் பேரில் அக்கரைப்பற்று -பொத்துவில் பிரதான வீதியில் அவ்வாகனத்தின் சாரதியையும் உதவியாளரையும் செவ்வாய்க்கிழமை (11) கைதுசெய்ததுடன் வாகனத்துடன் 14 பசுமாடுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை இந்த சந்தேக நபர்கள் வைத்திருந்தபோதிலும்இ வாகனத்தில் நெருக்கமான முறையில் கால்நடைகளை இவர்கள் ஏற்றிக்கொண்டு பயணித்ததாகவும் பொலிஸார் கூறினர்.
0 Comments:
Post a Comment