22 Jul 2015

மண்டூர் பகுதி பாடசாலையொன்றின் காவலாளி சடலமாகமீட்பு

SHARE
மண்டூர் பகுதி பாடசாலையொன்றில் இரவுவேளைக் காவலாளியாக கடமையாற்றிவந்த இளைஞன்  சடலமாக  நேற்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.



சம்மாந்துறையில் வசிக்கும் அகமட் லெப்பை முகமட் சபீக் (வயது 23) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.




மேற்படி பாடசாலைக்கு திங்கட்கிழமை (20) இரவு காவலுக்கு சென்ற இந்த இளைஞன் கதிரையில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு  பாடசாலைக்கு வந்த மாணவர்கள்  அழைத்துள்ளனர். இதன்போது இக்காவலாளி எதுவும் பேசாமல் இருந்தமையால் ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு மாணவர்கள்  தெரியப்படுத்தினர். இந்த நிலையில் வெல்லாவெளிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் மற்றும் திடீர் மரணவிசாரணை அதிகாரி த.காராளசிங்கம் சடலத்தை பார்வையிட்டபின்னர் பரேதபரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகர்  தெரிவித்துள்ள
SHARE

Author: verified_user

0 Comments: