ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காட்டு யானைகளால் தொடர்ந்து உயிராபத்தும் பொருட் சேதமும் இருந்து வருவதாகவும் இதனைத் தடுத்த நிறுத்த அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று கோரியும் கிராம வாசிகள் புதன்கிழமை மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை மற்றும் மட்டக்களப்பு-பதுளை வீதிப் பகுதியிலுள்ள பெரியபுல்லுமலை, வெலிக்காகண்டி, கோப்பாவெளி ஆகிய பகுதிகளிலேயே தொடர்ந்தும் காட்டு யானைகளினால் உயிராபத்தும் பொருள் அழிவுகளும் இருந்துவருவதாக கிராம வாசிகள் முறைப்படுகின்றனர்.
மூர்க்கத்தனமான மூன்று காட்டு யானைகள் தொடர்ந்தும் இந்தக் கிராமங்களில் உலாவிவருவதையிட்டு அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருந்து வருகின்றனர் என்று இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய விவசாயிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தின்போது குற்றஞ்சாட்டி குரலெழுப்பினர்.
ஏற்கெனவேயும் சில மாதங்களுக்கு முன்னர் கிராமத்தவர் ஒன்று திரண்டு தங்;களைக் காக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி அதிகாரிகளுகச்கெதிரான அதிருப்திகளை வெளியிட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment