14 Feb 2015

உலககிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்!

SHARE
11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (14 ஆம் திகதி) அனைத்து உலக ரசிகர்களது பலத்த எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகிறது .
14 அணிகள் பங்குபற்றுகின்ற இம்முறை உலககிண்ணப் போட்டியில் 14 அணிகள் சார்பாகவும் 15 பேர் கொண்ட இறுதிக்குழாமில் 11 வீரர்கள் ஆரம்பிக்கப்படுகின்ற அனல் பறக்கும் களத்தில் தத்தமது திறமையை ஒருங்கே வௌிப்படுத்தி தமது அணியின் சார்பில் வெற்றியை பெறவே பயிற்சி எடுத்துள்ளார்கள்.
இவ்வகையில் இன்று 14 ஆம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டியில் முதலாவது தினமான இன்று நியூசிலாந்து - இலங்கைக்கு இடையிலான போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்டேர்ச்சிலும் அதே நேரம் இரணடாவது போட்டி அதே நாளான 14 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
உலகக்கிண்ணப் போட்டியின் இரண்டாம் நாளான 15 ஆம் திகதி மூன்றாவது போட்டி தென்னாபிரிக்கா - சிம்பாப்வே அணிகளுக்கிடையில் ஹமில்டன் நகரிலும், நான்காவது போட்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் அடேவேல்ட ஓவலிலும் நடைபெறவுள்ளது.
மூன்றாவது நாளான 16 ஆம் திகதி ஐந்தாவது போட்டி அயர்லாந்து - மேற்கிந்திய தீவுகள் அணகளுக்கிடையில் நெல்சனில் நடைபெறும். நான்காவது நாளான 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள 06 ஆவது போட்டி நியூசிலாந்து - ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் டுனேடில் இடம்பெறும்.

18 ஆம் திகதி இடம்பெறவுள்ள 07 ஆவது போட்டி ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கன்பராவில் இடம்பெறும். 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள 08 ஆவது போட்டி ஐக்கிய அரபு இராச்சியம் - சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நெல்சனிலும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள 09 ஆவது போட்டி நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் வெலிங்டனிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: