1 Mar 2015

பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்ட பாடசாலை சிறுவர்கள்! அம்பாறையில் சம்பவம்

SHARE
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் பாடசாலை செல்லும் இரு சிறுவர்கள் அவர்களைப் பெற்றெடுத்த சொந்தப் பெற்றோரால் துடிக்கத் துடிக்கச் சூடுவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை 10 மாதம் பெற்றெடுத்த தாய்மார்களே இவ்விதம் கதறக்கதற சூடுவைத்தவர்களாவர்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலளவில் மனிதஅபிவிருத்திதான உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் யு.எல். அசாருதீன் ஆகியோர் சூடுபட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சகிதம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று அவர்களை சட்ட வைத்திய அறிக்கைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்திலுள்ள ஒரு தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சூடுவைக்கப்பட்டு 04 நாட்களுக்குப் பிறகே அவர்கள் செல்லும் பாடசாலை ஆசிரியரொருவருடாகவே இவ்விடயம்  தெரியவந்தது.
SHARE

Author: verified_user

0 Comments: