4 Feb 2015

67 சுதந்திர தினம் நல்லாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கின்றது-Dr.G.சுகுணன்

SHARE
- கமல்- 
இலங்கைத் திருநாட்டில் 67 சுதந்திர தினத்தினை ஒற்றுமையாகவும், எளிமையாகவும், கொண்டாடுகின்ற  இச்சந்தர்ப்பமானது நல்லாட்சி என்ற பதத்தை கொண்டிருக்கின்றது. என களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.

67 வது சுதந்திர தினத்தின நிகழ்வுகள் இன்று (04) மேற்படி வைத்திய சாலையிலும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் மத்தியில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….. 
இலங்கைத் திருநாட்டில் 67 வது சுதந்திர தினத்தை தேசிய ரீதியில் அனைத்து இனங்களும் ஒன்றாகவும் எளிமையாகவும் கொண்டாடும் இந் தருணத்தில் இம்முறை நல்லாட்சி என்ற பதத்துடன் இந்த சுதந்திரதினமானது கொண்டாடப்படுகின்றது.

இவ்வாறான இந்த முக்கியத்தவம் வாய்ந்த 67 வது சுதந்திர தினமானது எமது இந்த தாயகம் எல்லாவிதத்திலும் முன்னேற்றம் அடைந்து இன, மத நல்லிணக்கத்துடன் வீறு போடும் சந்தர்ப்பத்தில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் எமது களுவாஞ்சிக்குடி ஆதார வைத்திய சாலை உத்தியோகத்தர்களாகிய நாம் கடமைகளை செவ்வண்னே மேற்கொண்டு இந்த பிரதேச அபிவிருத்தியிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் நாங்கள் பங்காளிகளாக மாறவேண்டும்.

சமத்துவம் என்பது உறவுக்களுக்கான பாலமாக அமைகின்றது. அத்துடன் அது எதிர்காலத்தை மேன்மை அடையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. எனவே இவ் வருடம் இலங்கைத் திருநாட்டில் எமது சேவையின் மூலம் மக்கள் திருப்திபட வேண்டும். இதன் மூலம் நாங்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்பர்களாக மாறலாம்.

எனவே தான் இந்த நாளில் மிகவும் அத்தியாவசியமான சேவையில் இருக்கின்ற வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களாகிய நாங்கள் ஒன்றாக இணைந்து இந்த நாட்டிக்கு உன்னதமான சேவையை ஆற்றுவோம் என உறுதிபூண்டு செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: