19 Jan 2015

விமான எடைக்கு சமமான ஒபாமாவின் அதி நவீன கார்

SHARE
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க செல்லும் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது அதி நவீன காரில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் பயணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி பீஸ்ட் என்ற பெயர் கொண்ட ஒபாவின் இந்த அதி நவீன கார் 18 அடி நீளமுள்ளது. எட்டு தொன் எடை கொண்ட இந்த கார் போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது. ஆர்மர் பிளேட்டிங் எனப்படும் அதன் வெளிப்புற கவசம் 8 இஞ்ச் தடிமனானது. காரினுள் வெடிகுண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் அனைத்தும் தயராக இருக்கும்.

இந்த காரில் எந்நேரமும் வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்து தொழில் நுட்ப வசதிகளும் இருக்கும். இதன் டயர்களில் எவ்வளவு கூர்மையான பொருள் தாக்கினாலும் ஓட்டை விழாது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த கார் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: