கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கொம்பன்’. இதில்
இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா,
தம்பி ராமையா, கருணாஸ், மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்ராயன்
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை உள்ள கிராமங்களில் நடத்தப்பட்டுள்ளது. கிராம மக்கள் சந்தோஷமாக படப்பிடிப்பை காண வந்திருக்கிறார்கள். அப்போது கிராம மக்கள் நிறைய பேர் லட்சுமி மேனனை மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் அழைத்துள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவிக்காத லட்சுமி மேனன் உடனடியாக அவர்கள் வீட்டிற்கு
சென்று விருந்தோம்பலில் கலந்துக் கொண்டுள்ளார். கிராம மக்கள் வழக்கமாக
உண்ணும் உணவை லட்சுமி மேனனுக்கு செய்து கொடுத்துள்ளார்கள், அதை விரும்பி
லட்சுமி மேனன் சாப்பிட்டிருக்கிறார்.
தற்போது கொம்பன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வௌியீட்டுக்குத்
தயாராகி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தை முத்தையா
இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
0 Comments:
Post a Comment