வெள்ளம் வழிந்தோடிய பின்னர் இம்மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பும்போது
பின்வரும் பிரச்சனைகளை உடனடியாக எதிர்கொள்வர். உணவு கழிப்பறை உட்பட்ட
சுகாதாரத் தேவைகள். வெள்ளநீர் உட்புகுந்தமையால் வீடுகளில்
ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களைத் திருத்தம் செய்தல். பிள்ளைகளின்
புத்தகங்கள் உட்பட்ட கல்வி உபகரணங்களின் தேவை. இப்பிரச்சனைகளை
எதிர்க்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை உரியவர் மேற்கொள்;வதற்கான ஆயத்தங்களை
மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சித்
தலைவர்.சி.தண்டாயுதபாணி வேண்டுகோள் விடுக்கின்றார்.
தொடர்ச்சியாக
கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக தமது வாழ்விடங்களை இழந்து
அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள மூதூர் மற்றும் ;வெருகல் பிரதேசங்களில்
உள்ள மக்களை பார்வையிட்டு அவர்களுடைய தேவைகள் தோடர்பாக விசாரித்க சென்ற
கிழக்கு மாகாணசபையி;ன் எதிர் கட்சித் தலைவர் உற்பட தமிழ் தேசிய
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்கள். இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர்
அடங்கிய குழு வொன்று சென்று பார்வையிட்டதன் அடிப்படையில் எதிர்கட்சித்
தலைவர் சி.தண்டாயுதபாணி இவ்வாறு தெரிவித்தார்.
பொது இடங்களில்
தங்கியுள்ளவர்களுக்கு அவர்களுடைய பிரதேச செயலக பிரிவுகளினால் சமைத்த உணவு
வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் அவர்கள் தமது வீடுகளுக்கு வெள்ளம்
தடிந்ததன் பின்னர் செல்லும் போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்
கொடுப்பார்கள் எனவும் இதற்கான முன்னாயத்தங்களை அரசு மற்றும் தன்னார்வ
நிறுவனங்கள் மேற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
0 Comments:
Post a Comment