3 Dec 2014

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா

SHARE

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா வியாழக்கிழமை (04) மு.ப.9 மணிக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, கிராமியப் பாடல், புல்லாங்குழல் இசைத்தல், கவிதை பாடல், சமூக நாடகம், கலைஞர் கௌரவம், என்பன இடம்பெறவுள்ளதோடு,

“எழுகதிர்” எனும் சிறப்பு மலர் ஒன்றும் இதன்போது வெளியீட்டு வைக்கப் படவள்ளது.

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலாந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி.கே.பிரேமகுமார், பிரதேச செயலாளர்களான எம்.கோபாலரெத்தினம், என்.வில்வரெத்தினம், எஸ்.எச்.முஸ்ஸமில், திருமதி.ரி.தினேஸ், கே.தனபாலசுந்தரம், எம்.எம்.நௌபல்,  ஆகியோரும்,

மட்டக்களப்பு ஜக்கிய அபிவிருத்தி நிறுவனததின் பிராந்திய முகாமையாளர் எபெனேஸர் தர்ஷன், மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் பிராந்திய முகாமையாளர் எ.எல்.அப்துல் ஹலீம், மட்டக்களப்பு உலக நண்பரகளின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன், உட்பட  கலைஞர்கள், இலக்கியவாதிகள், அதிகாரிகள், கல்வியியலாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: