15 Nov 2014

குரு பிரதீபா பிரபா விருது பெற்ற அதிபருக்கு பாராட்டு .

SHARE
குருபிரதீபாபிரபா’ விருது பெற்ற பட்டிருப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலையான மட்.பட்.மண்டூர் 39 அ.த.பபாடசாலை அதிபர்திருஇதுரைராசா-சபேசன் பாடசாலைச் சமூகம் பாராட்டு.

அம்பிளாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்.அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலயம். மட்.குருக்கள்மடம் கலைவாணிமகாவித்தியாலயம் அகிய பாடசாலைகளில் கல்விபயின்று வவுனியா தேசிய கல்வியியற் கல்லுரியில் ஆசிரியர் பயிற்சிபெற்று மட்ஃதுறைநீலாவணை விபுலானந்தா வித்தியாலயத்தில் 1997.07.28ம் திகதி தனது முதல் நியமனத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டு முதன் முதலாக அப்பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைச்செய்து பெருமையைப் பெற்றவர்.

அதனைத் தொடர்ந்து அப்பாடசாலையில் தொடர்ச்சியாகப் பல மாணவர்களைச் சித்தியடைச் செய்ததுடன் மாவட்ட மட்டம். தேசியமட்ட நிலையில் திறமைச் சித்திபெறச் செய்த பெருமையும் இவருக்கு உண்டு.
இவரது சேவை அப்பிரதேசத்திற்கு மட்டுமல்ல பட்டிருப்பு கல்விவலயத்திற்கே பெருமையைதேடிக்கொடுத்ததனால் வலயக் கல்விப்பணிப்பாளர்களினதும். கல்வி அதிகாரிகளாலும் பாராட்டுப் பெற்றவர்.

தொடர்ந்து மட்ஃஉதயபுரம் தமிழ்வித்தியாலயத்தில் ஆசிரியர் பணியைத் தொடர்ந்ததுடன் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக உளவளத்துணை சிறப்புபயிற்சி பெற்று வலயத்தின் இணைப்பாளராக செயற்பட்டு பலமாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு உதவியவர்.

03.02.2010 இல் இருந்து மட்ஃபட்ஃமண்டூர் 39 அ.த.க. பாடசாலை அதிபராக செயற்பட்டுவரும் இவர் அப்பாடசாலை மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்திற்கு பெரும்பாடுபட்டு வருகின்றார்.
பட்டிருப்பு கல்விவலயத்தில் போரதீவுகல்விக் கோட்டத்தில் மிகவும்பின்தங்கிய எல்லைப்புறப் பாடசாலையாகும். எதுஎவ்வாறாக இருந்தாலும் இவருடன் இணைந்த ஆசிரியர்குழாத்தினால் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்பான அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதனால் அப்பாடசாலை வலயத்தில் உயிரோட்ட முள்ளபேசப்படும் பாடசாலையாக மாற்றியமைத்துள்ளார்கள்.

தற்போது அப்பாடசாலையில் மாணவர்களின்சேர்வு வீதம் அதிகரித்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின்கற்றல் முன்னேற்றம் அதிகரித்துதரம் 05 புலமைப்பரி சில்பரீட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் அனைத்துமாணவர்களும் சித்திபெற்றுள்ளதுடன் பாடசாலை கவின்நிலைப்படுத்தப் பட்டுளுளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர்மாணவர்களின் சிறந்த கல்விநோக்கத்தினை கருத்தில் கொண்டுதரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்மாணவர்களுக்கு ஞானவிளக்கு என்னும் பெயரில் மாதிரிப்பரீட்சை வினாத்தாள்களை தயாரித்து பலவருடங்களாக வெளியிட்டு வருகின்றார்.

அத்தோடுதரம் 04. 05 மாணவர்களுக்கான பொது உளச்சார்புபுத்தகம் இவ்வெளியீடுகள் அனைத்தையும் இலங்கையில் உள்ள தமிழ் மொழி மூலப்பாடசாலைகள் அனைத்தும்பயன் பெறுவதானால் அகில இலங்கை ரீதியில்புகழ்பெற்ற ஆசிரியராக இருந்துவருகின்றார்.

இவரது அனைத்து சேவைகளின் வினைத்திறனுக்கு இவ்வருடம் நடைபெற்ற சிறந்த ஆசிரியர்களுக்கான குருபிரதீபா பிரபா விருது பெற்றுள்ளமை இவரது உன்னதமான சேவைக்கு கிடைத்த உயரிய சான்றிதழாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: