மஹிந்த சிந்தனையின் கீழ் தேசிய புணர்வாழ்வு செயற்றிட்டத்திற்கு ஏற்ப எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக் கூடிய இலங்கையில் மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்கும் முகமாக உயிர்ப்பான வகுப்பறை ஒன்றை நிர்மானித்து அதனுள் மிகப் பயனுள்ள கற்றல் கற்பித்தல் செயல்பாட்டை முன்னெடுக்கும் ஆசிரியர் அதிபர்களினால் ஆற்றப்படும் அளவிலா சேவையினை கௌரவித்து
கடந்த 09.10.2012 அன்று இலங்கையில் தெரிவு செய்ப்பட்;டவர்களுக்கு குரு பிரதீபா பிரபா விருது வழங்கப்பட்டது.
கல்வியமைச்சினால் நடாத்தப்பட்ட இன்நிகழ்வு கொழும்பு மீபே கல்வி தலைமைத்துவ அபிவிருத்தி நிலையத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் விருது வழங்கி கொரவிப்பக்கபட்டனர்.
இவ்விருது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட போரதீவுக் கல்விக் கோட்டத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் வித்தியாலய அதிபர் சீனித்தம்பி கந்தசாமி அவர்களுக்கு கிடைத்துள்ளது.
இவர் சிறந்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் என்பதோடு விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த ஆரம்பிப்பாளராகவும் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment