3 Jan 2024

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பு.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளதுடன் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரைக்கமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச மட்டக் குழுக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பெய்துவரும் கடும் மழையின் காரணமாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட களுதாவளை, களுவாஞ்சிகுடி, உள்ளிட்ட பல கிராமங்களில், பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பிரதேசத்திலுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் ஒத்துளைப்போடு வெள்ள நீரை துரிதமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்த உள்ளிட்ட குழுவினர் பிரதேசத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் உள்ள ஒரு ஜே.சி.பி இயந்திரம் மூலம் அப்பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலையினால் மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு மேலும் ஒரு ஜே.சி.பி இயந்திரத்தினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கட்சியின் பிரதிச் செயலாளர் சந்திரகுமார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசக் குழுவின் பொருளாளர் லிபியன் கட்சியின் பிரதேச உறுப்பினர்கள் மற்றும் மண்முனை; தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.அறிவழகன், தொழில்நுட்ப உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவகர்கள் ஈடுபட்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: