2 Jan 2024

நாடு சுதந்திரம் பெற்றது தொடக்கம் அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள் அமைந்துள்ளன - நிஹால் அஹமட்

SHARE

நாடு சுதந்திரம் பெற்றது தொடக்கம் அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள் அமைந்துள்ளன - நிஹால் அஹமட்.

நாடு சுதந்திரம் பெற்றது தொடக்கம் அடிப்படை மனித உரிமை மீறல்களில் பிரதான ஒன்றாக திட்டமிட்ட நிலப்பறிப்புக்கள் அமைந்துள்ளதாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்டச் செயலணியின் இணைப்பாளரும் மனித எழுச்சி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான  கே. நிஹால் அஹமட் தெரிவித்தார்.

காணிகளை இழந்துள்ள மக்களுக்காக குரல் எழுப்பி வரும் வடக்கு கிழக்கு செயற்பாட்டாளர்களின் அனுபவப் பகிர்வு கலந்துரையாடல் திங்கட்கிழமை (01.01.2024) ஒலுவில் விடுதியில் இடம்பெற்றது.

அங்கு நிகழ்வுக்குத் தலைமையேற்று மேலும் உரையாற்றிய நிஹால் அஹமட், காணிகளை இழந்த மக்கள் தமது காணி உரிமை சார்ந்து மிக நீண்ட காலமாகப் போராடி வருகின்றார்கள். அத்தகைய பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களது உரிமைப்போராட்;டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணி  நீண்ட காலமாகச் செயற்பட்டு வருகின்றது.

 

அம்பாறை மாவட்டத்தில் 4652 குடும்பங்களினது 14127 ஏக்கர் பரப்பளவான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான ஆய்வு ரீதியான ஆவணங்கள் நமக்குக்  கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனூடாக பொறுப்புவாய்ந்தவர்களது பொறுப்புக்கூறலை அதிகரிக்கவும் விளைகின்றோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டப்பட்டு அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளை ஆய்வு ஆவணங்களாக உருவாக்கி அந்த ஆய்வு ஆவணங்களினூடாக பரிந்துரைப்புச் செயற்பாடுகளைச் செய்து பல வெற்றிகளைக் கண்டு கொண்டிருக்கின்றோம். இன மத பேதங்களுக்கப்பால் இதனை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து எடுக்கின்ற முயற்சிகளின் வெற்றிகளை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டின் வேறெந்தப் பாகங்களிலும் அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும்.

 

அதேவேளை, மக்களது காணிகளைப் பறிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் அரசின் கொள்கைளினாலோ அல்லது வேறெந்தத் தரப்பினாலே மேற்கொள்ளப்படக் கூடாது என்பதற்கான இறுக்கமான சடட்டங்கள் கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டுதான் இத்தகைய விழிப்புணர்வுச் செயலமர்வுகள் நடத்தப்படுகி;ன்றன.

கிழக்கில் காணியிழந்தோருக்காகப் போராக்கொண்டிருக்கின்ற எம்மோடு இணைந்து கொண்டு எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்வதற்காக வடக்கில் காணியிழந்தோரின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற செயற்பாட்டாளர்களும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.

ஆகவே இலங்கையில் காணியிழந்த அனைத்து சமூகங்களுக்குமான உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்தப்பட வேண்டும். எதிர்வரும் காலங்களில் இலங்கையில் காணியிழந்து எவரும் நடுத் தெருவில் நிற்கும் நிலை வந்துவிடக் கூடாது.

இந்த நாட்டில் பிரச்சினைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததுதான் பிரதான பிரச்சினையாகும். இது இன ரீதியானது அல்ல. புரிந்து கொள்ளாமை சார்ந்தது. "என்றார்

கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் காணி ஆணையாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், காணி உரிமைகளுக்காகச் செயற்படும் வடபகுதி மற்றும் கிழக்கு மாகாண அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள், துறைசார்ந்த செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

நிகழ்வின் வளவாளர்களாக சட்டத்தரணியும் செயற்பாட்டாளருமான சந்துன் துடுகல, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் யாசீன் மின்னத்துல் சுஹீறா  ஆகியோர் கலந்து கொண்டனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: