12 Dec 2023

ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் மட்டக்களப்பு மாணவன் சாதனை.

SHARE


ரோபோ தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் மட்டக்களப்பு மாணவன்  சாதனை.

மகரகம் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற தேசியமட்ட ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்குபட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தைச் சோந்த நான்கு மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் கே.வி.பவிலாஸ் எனும் மாணவன் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இம் மாணவனின் வெற்றிக்கு வழிகாட்டி ஆலோசனை வழங்கிய வித்தியாலய அதிபர் .சந்திரகுமார் மற்றும் ஆசிரியர்களான எஸ்.கலைச்செல்வன், ரி.பிறேம்குமார், என்.செந்திபன், .கோமேஸ்வரன், அத்துடன் (பல்கலைக்கழக மாணவன்) ஆர்.றஜீவனன் விசேடமாக தொழில்நுட்ப வளவாளர எஸ்.விஜயபாஸ்கர்உள்ளிட்ட பலர் இம்மாணவனின் வெற்றிக்கு உரம் சேர்த்துள்ளனர்.

பாடசாலைக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும்  தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனையைப் பெற்றுக் கொடுத்துள்ள மாணவளுக்கும், அதங்கு உறுதுணையாகவிருந்த அதிபர் ஆசிரியர்களுக்கும், கல்விச் சமூகத்தினர் வாழ்த்துக்களைத் தெரிவித்தவண்ணமுள்ளர். மேலும் இப்பாடசாலையில் ரோபோ தொழில்நுட்பத்தில் மேலும் புதிய படைப்புக்களைச் செய்து முன்னேற்றம் காண்பதற்கு சகலரினதும் ஒத்துளைப்பை எதிர்பார்ப்பதாக பாசாலைச் சமூகம் தெரிவித்துள்ளது





SHARE

Author: verified_user

0 Comments: