23 Dec 2023

நெற்செய்கையில் சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

SHARE

நெற்செய்கையில் சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.

விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தெற்கு வலயத்திற்கு உட்பட்ட நாவற்கேணிக் கண்டத்தில் நெற்செய்கையில் சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றல் தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(22.12.2023)  தும்பங்கேணிக் கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் போது விவசாயத் திணைக்களத்தின் விவசாய வியாபார ஆலோசளைப் பிரிவின் கெப் (GAP) நெற் கண்டம் எனும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கருக்கு தேவையான விதைநெல் மற்றும் நிலப்பண்படுத்தல் செலவீனங்களை வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதுமேலும் நெற் செய்கையில் ஏற்படக்கூடிய நோய் பீடைகளின் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முகாமைத்துவ நடவடிக்கைகள் பற்றியும் விவசாயிகளுக்குத் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், பிரிவிற்குப் பொறுப்பான விவசாயப் போதனாசிரியர் .சகாப்தன் ஏனைய விவசாயப் போதனாசிரியர்கள் தொழினுட்ப உதவியாளர்கள் கெப் (GAP) பிரிவினுடைய தொழினுட்ப உதவியாளர் எல்.லியிந்தன் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: