18 Sept 2023

உள்ளுராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகள் இன ஐக்கியத்தின் பலமான அடித்தளமாக இருக்க வேணடும்.

SHARE

உள்ளுராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகள் இன ஐக்கியத்தின் பலமான அடித்தளமாக இருக்க வேணடும்.

மக்கள் சக்தியின் பலமான அடித்தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட  உள்ளுராட்சி மன்றப் பெண் பிரதிநிதிகள் தமது அரசியல் ஆளுமையை நிருபிக்கும் வண்ணம் உள்ளுர் சமாதானத்தின் அடித்தளமாகவும் இருந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துவதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையிலான சமாதானத்தையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து பேணிவருவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்று வரும் செயலமர்வில் அவர் உரையாற்றினார்.

சமாதானத்திற்கான செயற்திட்டமொன்றைச் சமர்ப்பித்து அதனைச் செய்து முடிப்பதற்கான ஆலோசனைச் செயலமர்வு ஞாயிறன்று 17.09.2023 மஞ்சந்தொடுவாய் கிராம முன்னேற்றச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வில், மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.. அப்துல் ஹமீட், உள்ளுராட்சி மன்ற முன்னாள் பெண் உறுப்பினர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சமூக நல்லுறவு, சகவாழ்வு, நல்லிணக்கம், சமாதானம்  ஆகியவற்றோடு இன ஐக்கியத்தை கட்டிக்காக்கும் விடயங்களுக்காக செய்து முடிக்கப்பட வேண்டிய செயல் திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.

அதேவேளை மோதல் நிலைமாற்றத்திற்காக சகவாழ்வை ஏற்படுத்தும் சக்திமிக்க தரப்பாக உள்ளுராட்சி மன்ற முன்னாள் பெண் உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படப் போகும் பெண் உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்ற கருத்தும் அங்கு வலியுறுத்தப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: