28 Mar 2023

பெரியகல்லாறு மெதடிஸ்த்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

SHARE

மட்/பட்/பெரிய கல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை தரம் ஒன்றிக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு-2023

மட்/பட்/பெரிய கல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையின் தரம் ஒன்றிக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு . பூபாலபிள்ளை கமலதாசன் தலைமையில் 2023.03.28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் . சிவானந்தம்  சிறீதரன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் பெரியகல்லாறு  சிறி சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு நடேசடுணஸ்காந்த குருக்கள், பெரிய கல்லாறு சேகரமுகாமைக்குரு ச.டா.வினோத், ஆன்மிக அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி மகிழ்விக்கபட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அவர்கள் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
















































SHARE

Author: verified_user

0 Comments: