26 Mar 2023

அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதையில் பயணம் செய்வேரிடமிருந்து எதிர்வரும் முதலாம் திகதிமுதல் கட்டணம் அறவீட ஏற்பாடு – எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரயாணிகள்.

SHARE

அம்பிளாந்துறைகுருக்கள்மடம் படகுப்பாதையில் பயணம் செய்வேரிடமிருந்து எதிர்வரும் முதலாம் திகதிமுதல் கட்டணம் அறவீட ஏற்பாடுஎதிர்ப்பு தெரிவித்துள்ள பிரயாணிகள்.

மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறைகுருக்கள்மடம் படகுப்பாதையில் பயணம் செய்து வரும் பயணிகளிடமிருந்து இதுவரையில் எதுவித கட்டணங்களும் அறவிடப்படாத நடைமுறையே இதுவரையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும்  2023.04.01 ஆம் திகதி முதல் இப்படக்குப்பாதையில் பயணம் செய்யும் பிரயாணிகளிடமிருந்து கட்டணம் அறவிடப்படவுள்ளதாக குருக்கள்மடம் இறங்குதுறையில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதம பொறியியலாளர் அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி..எம்.றிஸ்வி அவர்களால் விளம்பரம் இடடப்பட்டுள்ளது.

அதில் பாதை பயணத்திற்கான கட்டணம் அறவிடுதல் எனும் தலைப்பிட்டு, எதிர்வரும் 01.04.2023 திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாதை பயணத்திற்கான கட்டணம் பின்வருமாறு அறவிடப்படும். பயணிகள்(12 வயதிற்கு மேற்பட்டவர்கள்) 10 ரூபா, துவிச்சக்கர வண்டி ஒருவருடன் 30 ரூபா, மோட்டார் ஓட்டுனருடன் 50 ரூபா, ஆட்டோ ஓட்டுனருடன் 100 ரூபா, கார், வேன், பிக்கப் ஓட்டுனருடன் 250 ரூபா, சீருடையுடன் வரும் பாடசாலை மாணவர்களுக்கும், அரச வாகனங்களுக்கும் இலவசம் எனக் குறிப்பிட்டு, எந்திரி..எம்.றிஸ்வி, பிரதம பொறியியலாளர், பிரதம பொறியியலாளர்அலுவலகம், வீதி அபிவிருத்தித் திணைக்களம், மட்டக்களப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க தாம் இதுவரைகாலமும் எதுவித கட்டணங்களும் வழங்காமலேயேதான் தமது போக்குவரத்துக்களை இக்குறித்த படகுப்பாதையூடாக மேற்கொண்டு வந்ததாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையில் தம்மிடமிருந்து இதற்காக நிதி வசூலிப்பது என்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அம்பிளாந்துறைகுருக்கள்மடம் படகுப்பாதையில் தினமும் பயணம் செய்துவரும், அரச உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள், விவசாயிகள், உள்ளிட்ட பலரும் தெரிவிப்பதோடு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் நிதி அறவிடும் நடைமுறையை நிறுத்த வேண்டும், இல்லையேல் இதற்கு எதிராக தாம் போராடத் தயாராகவுள்ளதாகவும், அப்படக்குப் பாதையில் தினமும் பணயம் செய்துவரும் பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.










SHARE

Author: verified_user

0 Comments: