6 Nov 2022

தொடற்சியான காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உட்படும் மக்கள்.

SHARE

தொடற்சியான காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உட்படும் மக்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட போரதீவுப்பற்றப் பிரதேசத்தின்; திக்கோடை, தும்பங்கேணி இளைஞர்விவசாதிட்டம், களுமுந்தன்வெளி, உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் சனிக்கிழமை(05) இரவு உட்புகுந்த காட்டுயானைகள் பயன்தரும் தென்னை, மரவெள்ளி, வாழை உள்ளிட்ட மரங்களை அழித்துள்ளதுடன், வீடுகளையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றர்.

தாம் கடந்த யுத்தகாலத்தில் எவ்வாறு பல இன்னல்களை எதிர்கொண்டு வந்தோமோ அதுபோன்று தற்போது இரவு பகலுமாக காட்டுயானைகளின் தாக்குதலையும், அழிவுகளையும் எதிர்கொள்ள நோரிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

நாம் இவ்வாறு அல்லும் பகலும் தூக்கமின்றி வழித்திருப்பதனால்  தினமும் நோய் நிலைக்குட்படுவதாகவும், தமது நிலமையை அறிந்தவர்கள் கண்டும் காணாததுபோல் இருப்பதானது தமக்கு மிகுந்த மனவேதனையளிப்பதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றர்.

எனவே அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டுப்பகுதியில் தங்கி நிற்கும் காட்டு யானைகளைப் பிடித்துக் கொண்டு சரணாலயங்களில் விட்டு விட்டு, எல்லைப்புறங்களில் யானைப் பாதுகாப்பு வேலிகளை இடவேண்டும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றர்.









SHARE

Author: verified_user

0 Comments: