10 Nov 2022

மட்டக்களப்பில் தொடர்ந்தும் அதிக மழை வீழ்சி பதிவு, குளங்களின் நிர்மட்டமும் உயர்வு.

SHARE

மட்டக்களப்பில் தொடர்ந்தும் அதிக மழை வீழ்சி பதிவு, குளங்களின் நிர்மட்டமும் உயர்வு.

வடகீழ் பருவப்பெயற்சி மழை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிலையல் மட்டக்கள்பபு மாவட்டதில் தாழ் நிலங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்விலும் சற்று தழம்பல் ஏற்பட்டுதாக மக்கள் தெரிவிக்கின்றனர்;

இந்நிலையில் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளன. அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 23அடி 2 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 16அடி, வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 16அடி, கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 9அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 7அடி 8 அங்குலம், வெலிக்காக் கண்டிய குளத்தின் நீர்மட்டம் 14அடி, வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 8அடி 4 அங்குலம், புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் 4அடி 3 அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை(10) காலை 8 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பில் 54.6மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி, நவகிரிப்பகுதியில் 58 மீற்றர் மழைவீழ்ச்சி, தும்பங்கேணிப் பகுதியில் 22.5 மீற்றர் மழைவீழ்ச்சி, மைலம்பாவெளிப்பகுதியில் 43.4 மீற்றர் மழைவீழ்ச்சி, பாசிக்குடாப் பகுதியில் 26.6 மீற்றர் மழைவீழ்ச்சி, கிரான் பகுதியில் 35.2 மீற்றர் மழைவீழ்ச்சி, உன்னிச்சைப் பகுதயில் 35 மீற்றர் மழைவீழ்ச்சி, உறுகாமம் பகுதியில் 31.5 மீற்றர் மழைவீழ்ச்சி, வாகனேரிப்பகுதியில் 12.4 மீற்றர் மழைவீழ்ச்சி,  கட்டுமுறிவுப் பகுதியில் 37.5 மீற்றர் மழைவீழ்ச்சி, கல்முனையில் 17.1 மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பத்திகாரி சு.ரமேஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு வாசியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதையடுத்து, வெட்டப்பட்டப்பட்டுள்ள பெரியகல்லாறு  முகத்துவாரத்தினால் ஆற்றுநீர் கடலை நோக்கி மிகவும் வேகமாக  கரைபுரண்டு வழிந்தோடுவதையும் அவதானிக் முடிகின்றது.







SHARE

Author: verified_user

0 Comments: