14 Oct 2022

ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி செயலமர்வு !!

SHARE

 (நூருல் ஹுதா உமர்)

ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ பயிற்சி செயலமர்வு.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவத்தில் ஊடகவியலாளர்களின் பங்குகள் தொடர்பிலான கலந்துரையாடலும், செயலமர்வும் இன்று (13) அம்பாறை தனியார் விடுதியில் அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது. 

இந்த செயலமர்வை அம்பாறை அரசாங்க அதிபர் ஜே. எம்.ஏ. டக்ளஸ் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வளவாளர்களாக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் சுகத் திஸாநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ், வளிமண்டலவியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் துலாரி பெர்னாண்டோ, மாவட்ட உத்தியோகத்தர் ஏ.எம். பிரோஸ், அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊடகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஜானக ஹெதுன் பதிரஜ ஆகியோர் கலந்து கொண்டு அனர்த்தங்கள் தொடர்பிலும், அபாய எச்சரிக்கை தொடர்பிலும், முன்னாயத்த விடயங்கள் தொடர்பிலும் இவற்றில் ஊடகங்களின் பங்களிப்பும், ஊடகவியலாளர்களின் சேவைகள் தொடர்பிலும் விரிவுரை நிகழ்த்தினர். 

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த மும்மொழி ஊடகங்களிலும் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். 







SHARE

Author: verified_user

0 Comments: