10 Oct 2022

கிழக்கு மாகாண பாடசாலைமட்ட விடையாட்டுப் போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை முதலிடம் பெற்று சாதனை.

SHARE

(கோகுல்) 

கிழக்கு மாகாண பாடசாலைமட்ட விடையாட்டுப் போட்டியில் களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை முதலிடம் பெற்று சாதனை.

05.10.2022 தொடக்கம் 09.10.2022 வரை கந்தளாய் லீலாரெத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் மட்/பட்/களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை 123 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதோடு வெற்றிக்கிண்ணத்தையும் 25,000 ரூபா பணப்பரிசினையும் தனதாக்கிக் கொண்டுள்ளதாக மேற்படி பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

இவ்விளையாட்டு விழாவில் 15 தங்கப்பதக்கங்கள், 09 வெள்ளிப்பதக்கங்கள், மற்றும் 08 வெண்கலப்பதக்கங்களையும் அப்பாடசாலை பெற்றுள்ளதுடன், 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரராக எம்.கதுஸ்கர் அவர்களும் சிறந்த பெண் அஞ்சல் குழுக்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிலையில்  கிழக்கில்விளையாட்டில்முதல் கல்வி வலயமாக 194 புள்ளிகள் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றுக்கொண்டுள்ளது.

அந்த வகையில் கிழக்கு மாகாண பாடசாலைமட்ட விடையாட்டுப் போட்டியில 123 புள்ளிகளைப் பெற்று மட்/பட்/களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை முதலாம் இடத்தையும், 46 புள்ளிகளைப் பெற்று திரு.கந்.அக்ரபோதி தேசிய பாடசாலை இரண்டாவது இடத்தையும், 42 புள்ளிகளைப் பெற்று மட்.பட்.செட்டிபாளையம் மகாவித்தியாலயம் மூன்றாவது இடத்தையும்பெற்றுள்ளதுடன், 194 புள்ளிகளைப் பெற்றறு பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தையும், 94 புள்ளிகளைப் பெற்று கந்தளாய் கல்வி வலயம்  இரண்டாம் இடத்தையும், 88 புள்ளிகளைப் பெற்று கல்முனை கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.









SHARE

Author: verified_user

0 Comments: