ஆறுமுகத்தான்குடியிருப்பு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் 44ஆம் வருட உற்சவ விழா.
இவ்வாலயத்தின் உற்சவ விழா கடந்த திங்கள்கிழமை 22.08.2022 அன்று மடையெடுப்பு திருக்கதவு திறத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து தினமும் விஷேட பூசைகள் இடம்பெற்று வந்தன. வீதி ஊர்வலம், விஷேட ஆராதனை, வீர கம்பம் வெட்டுதல், பலி சடங்கு, தீ மூட்டுதல், தீ மிதித்தல், நெல்லுக் குற்றுதல் என்பனவற்றுடன் இறுதியாக விநாயகர்பானை எழுந்தருளல், பள்ளய சடங்கு, சமுத்திர தீர்த்தம் அன்னதான நிகழ்வு என்பனவற்றுடன் இனிதே நிறைவு பெற்றதாக ஆலய பரிபாலனை சபை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால் கடந்த மூன்று வருடங்களாக இவ் ஆலய உற்சவ நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கும் பரிபாலன சபையின் இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பிரதேச அடியார்கள் கலந்து கொண்டதாகவும் கூறினர்.
0 Comments:
Post a Comment