7 Jul 2022

ஊடகங்கள் தற்காலத்தில் ஊடக தருமத்தை தள்ளிவிட்டு வியாபாரத்துடனும், அரசியல் தனத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கின்றன - கலாநிதி.சிவரெத்தினம்.

SHARE

ஊடகங்கள் தற்காலத்தில் ஊடக தருமத்தை தள்ளிவிட்டு வியாபாரத்தனதுடனும், அரசியல் தனத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கின்றன - கலாநிதி.சிவரெத்தினம்.

தற்காலத்தில் ஊடகங்கள் ஊடக தருமத்தை தள்ளிவிட்டு வியாபாரத்தனதுடனும், அரசியல் தனத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கின்ற இந்நிலையில் ஊடகவியலாளர் சக்திவேல் அவர்களின் ஊடக வெளியீடுகள் அனைத்தும் உணர்ச்சி வசப்பட்டு தெய்திகளை வெளிக்கொணர்வதில்லை. ஒரு சமூகப் பெறுப்புடன் அவர் ஊடகக் கடமையினை செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. என கிழக்குப் பல்கலைக் கழகத்திச் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கட்புல தொழில்நுட்பத் துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வசக்திவேல் எழுதிய பாமாலை   இறுவெட்டு வெளியீட்டு விழா வியாழக்கிழமை (07.07.2022) களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் முன்றில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக காலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

மாரியம்மன் மற்றும் கண்ணகியம்மான் ஆகிய தொய்வங்கள் மட்டக்களப்பின் காலநிலைக்கும் அதனுடைய பொருளாதாரத்திற்கும், அதனுடைய சூழ்நிலைக்கும் தேவையான தெய்வங்கள். இந்த இரண்டு தெய்வங்களும் மட்டக்களப்பு மண்ணினுடைய பூர்வீகத் தெய்வங்கள். கண்ணகியம்மன் வெப்பத்தைக் குறைத்து நோயிலிருந்து பாதுகாக்கும், அடுத்தது மாரியம்மன் மழைக்கான தெய்வமாகும். எனவே ஒரு தெய்வம் உணவை வழங்க மறு தெய்வம் நோயிலிருந்து காக்கின்றது. இவை மட்டக்களப்பின் சமூகப் பண்பாட்டின் ஒரு முக்கியமான விடையமாகும். ஏனைய தெய்வங்களை நாம் ஆரியத் தெய்வற்கள் என சொல்வோம்.

எமது மாரியம்மன், கண்ணகை அம்மன் தெய்வங்களை சிறு தெய்வம் எனும் சொல்லால் சிறுமைப் படுத்தப்படுகின்றன. படிப்பறிவில்லா மக்களால் வழிபடப்படுவது சிறு தெய்வங்கள் என சிலர் தெரிவிக்கின்றார்கள். அவ்வாறு சிலருக்கு மூளைச் சலவை செய்து வைத்துள்ளோம். உண்மையிலே சிறு தெய்வ வழிபாடு என்பது எமது சொற்பயன்பாடு இல்லை அது ஆரியர்கள் சமஸ்கிருத மயமாக்கத்தினால் எமக்கு திணிக்கப்பட்ட ஒரு சொற்பாடாகும். எனவே இதனை மக்கள் தெய்வம், மக்கள் கலைகள் என்ற சொற்களைத்தான் நாம் பயன்படுத்தல் வேண்டும். மக்கள் எனப்படும்போது உழகை;கும் மக்கள் அவ்வாறு உழகைக்கும் மக்களின் தெய்வம்தான் மாரியயம்மனும், கண்ணகை அம்மனும். எனவே ஊடகவியலாளர் சக்திவேல் இன்று வெளியிட்டிருக்கின்ற பாமாலையூடாக மட்டக்களப்பின் பண்பாட்டுடன் இணைந்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் விநாயகர் கலைக்கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான மு.சவுந்தரராசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு ஆன்மீக அதிதியாக களுமுந்தன்வெளி மாணிக்கப் பிள்ளையார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் பிரதம குரு சிவ ஸ்ரீ .கு.திருச்செல்வம் குருக்கள் அவர்களும்,  பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகம் - சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கற்புல தொழில்நுட்பத்துறையின் தலைவர் கலாநிதி.சு.சிவரெத்தினம் அவர்களும், சிறப்பு அதிதிகளாக களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தின் அதிபர் நா.ராமேஸ்வரன் கலந்து கொண்டிருந்தனர்.

விநாயகர் கலைக்கழகத்தின் உபதலைவரும் ஆசிரியருமான . தரணிதரனின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கை செஞ்சிலுவை  சங்கத்தின் மட்டக்களப்பிற்கான தலைவர் .வசந்தராஜா அவர்களினால் இறுவெட்டை வெளியீட்டு வைத்தார்.

இறுவெட்டின் முதற் பிரதியை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஆலோசகருமான தேசபந்து எம்.செல்வராஜா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இறுவெட்டின் கவிஞர் நயவுரையினை தொடர்ந்து கவிஞர் .ஜீவரெட்ணம் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தியதுடன், ஏற்புரையை பாடலாசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான .சக்திவேல் அவர்களும், நன்றியுரையை விநாயகர் கலைக்கழகத்தின் செயலாளர் யோ. கிவேதன் அவர்களும் நிகழ்த்தினார்.

குறித்த இறுவெட்டிற்கு கிழக்கிலங்கையின் புகழ்பூத்த இசையமைப்பாளர் நிஸ்கமானந்தராஜா டனூஷ்ஷியன்  இசையமைத்துள்ளதுடன்இலங்கை வானொலி தேசிய கலைஞரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலைச்சுடர் வீ.பத்மசிறி  மற்றும் புகழ்பூத்த பாடகி செல்வி சுலக்ஷனி புவனேந்திரராசா ஆகியோர் இணைந்து பாமாலையினை பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












 



























SHARE

Author: verified_user

0 Comments: