2 Jun 2022

வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணமாக பணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

SHARE

வவுணதீவு பிரதேசத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணமாக பணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன்

சமுர்த்தி பயனாளிகளுக்காக விசேட நிவாரண வேலைத்திட்டம் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணமாக பணம் வழங்கும் நடவடிக்கை புதன்கிழமை (01ம் திகதி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1900 ரூபா சமுர்த்தி பெறும் பயனாளிக்கு 3100 ரூபாவும், 3200 ரூபா சமுர்த்தி பெறும் பயனாளிக்கு 3100 ரூபாவும், 4500 ரூபா சமுர்த்தி பெறும் பயனாளிக்கு 3000 நிவாரணப்பணமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் புதுமண்டபத்தடி, கரவெட்டி ஆகிய சமுர்த்தி வங்கிகளினூடாக சமுர்த்தி குடும்பங்களுக்கு இந் நிவாரணப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.

புதுமண்டபத்தடி சமுர்த்தி வங்கியில் இடம் பெற்ற நிகழ்வில் முகாமையாளர் என். ஜெயசீலன், உதவி முகாமையாளர் ஏ. மேகலா, வங்கி கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஏ.நுதாசினி மற்றும் வங்கி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தற்போதய பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட  சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்வாங்கப்பட்ட சமுர்த்தி பெற தகுதியான குடும்பங்களுக்கும் நிவாரணக் கொடுப்பனவினை வழங்க  சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.




SHARE

Author: verified_user

0 Comments: