3 Apr 2022

கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு.

SHARE

 கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கு.

நாட்டில் தந்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மிகவும் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் மாவட்டதிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், சுப்பர் மார்கட், தனியார் நிலையங்கள், அறநெறிப் பாடசாலைகள், உள்ளிட்ட அனைத்தும் இயங்காத நிலையில் முற்றாக மூடப்பட்டுள்ளன. 

வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. எனினும் ஆங்காங்கே சில இடங்களில் மாத்திரம் மரக்கறிகளை விற்பனை செய்யும் சிறிய கடைகள் திறந்துள்ளதையும், அதில் ஒரு சில மக்கள் நடந்து சென்று மரக்கறிவகைகளைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வதையும் காணமுடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்புகல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி சந்தியில் பொலிசாரால் புதிதாக வீதித்தடைகள் இடப்பட்டு, அவ்வப்போது வரும் வாகனங்களையும், மக்களையும் பரிசோதனைக்குட்படுத்தி வருவதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்பவர்களை போக்குவரத்திற்கு விடுவதுடன். ஏனையவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வரப்படுகின்றனர்.

மாவட்டத்தின் படுவாங்கரை மற்றும் ஏழுவாங்கரைப் பகுதிக்கு பரஸ்பர விஜயம் செய்பவர்கள் பட்டிருப்பு சந்தியிலிருந்து வைத்து பொஸிசார் வழிமறித்து வைத்தியசாலை, விவசாய நடவடிக்கை உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு மாத்திரம் செல்பவர்களை பயணத்திற்கு விடுவதையும், ஏனையவர்கள் பொலிசாரின் கண்டிப்பான உத்தரவுக்குமைய திருப்பி அனுப்பப் படுவதையும் அவதானிக்க முடிகின்றது.     











                                                

SHARE

Author: verified_user

0 Comments: