3 Mar 2022

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை.

SHARE

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற மகா சிவராத்திரி பூசை.

இந்துக்களினால் மிகச்சிறப்பாக சிவனை நோக்கி அனுஸ்டிக்கும் மகா சிவராத்திரி விரத்தின் பூசை நிகழ்வுகள் கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்  செவ்வாய்க்கிழமை(01) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மாலை 06 மணிக்கு முதலாவது ஜாமபூசையும், இரவு 10 மணிக்கு இரண்டாவது ஜாமபூசையும் (லிங்கோற்பவர் பூசையும்), அதிகாலை 03 மணிக்கு மூன்றாவது ஜாமபூசையும், காலை 05 மணிக்கு நான்காவது ஜாமபூசையும்  இடம்பெற்றிருந்தது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சுதானந்த குருக்கள் தலைமையில் சிவஸ்ரீ சோதிலிங்க குருக்கள் மற்றும் மு.கு.சபாரெட்ணம்  குருக்கள் ஆகியோரினால் நான்கு ஜாமபூசை வழிபாடுகளும் விசேட யாக பூசையும் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் வருகைதந்து பூசை வழிபாடுகளில் பக்திபூர்வமாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















SHARE

Author: verified_user

0 Comments: