3 Mar 2022

மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை குளங்களின் நீர்மட்டமும் உயர்வு.

SHARE

மட்டக்களப்பில் தொடர்ந்தும் மழை குளங்களின் நீர்மட்டமும் உயர்வு.

மட்டக்களப்பு கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதனால் மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர் இந்நிலையில் மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் வியாழக்கிழமை(03) காலை 6மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 33அடியாகவும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 6அங்குலமாகவும், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடி 1அங்குலமாகவும், உயந்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையில் கடந்த 24மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 42.5மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: