3 Mar 2022

கும்புறுமூலை முனீஸ்வரர் சிவனாலயத்தில் இடம்பெற்ற கோறளைப்பற்று பிரதேச மகா சிவராத்திரி விழா.

SHARE

கும்புறுமூலை முனீஸ்வரர் சிவனாலயத்தில் இடம்பெற்ற கோறளைப்பற்று பிரதேச மகா சிவராத்திரி விழா.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியம்

நடாத்திய கோறளைப்பற்று பிரதேச மகா சிவராத்திரி விழா வாழைச்சேனை, கும்புறுமூலை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய முன்றலில் 2022.03.01ம் திகதி இரவு 9.30 மணிக்கு கோறளைப்பற்று பிரதேச செலயலக உதவி பிரதேச செயலாளர்  திருமதி.அமலினி கார்த்தீபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள இந்து அறநெறி பாடசாலைகளை சேர்ந்த மாணவர்வர்களின் கலைநிகழ்வுகளான நடனம், பரதநாட்டியம், கோலாட்டம், வில்லுப்பாட்டு, நாடகங்கள், பேச்சாற்றலை வெளிப்படுத்தும் போட்டி நிகழ்வுகள், சைவசமய பொதுஅறிவு வினாவிடைப்போட்டிகள் மற்றும்  தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளும் சிறப்பாக மேடையை அலங்கரித்தன.

இந்நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாளராக 108 சிவலிங்க சிவபூமி செந்தமிழாகம தலைமை அருட்சுணைஞரும், சித்தஆயுர்வேத வைத்தியருமான கேணியூர் கவிஞர்  தவத்திரு. இரமேசுகுமார் அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தரும், கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறிப்பாடசாலைகள் ஒன்றியத்தின் தலைவருமான நே.பிருந்தாபன் , கலாசார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர்.சிவகுமார், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டுகேந்தினி சிறிஸ்கந்தராஜா, கும்புறுமூலை கிராம உத்தியோகத்தர் லோபனராஜ் மற்றும் அறநெறி ஒன்றியத்தின் நிர்வாகிகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மட்டக்களப்பின் பல இடங்களிலும் இருந்து இவ்வாலயத்திற்கு வருகை தந்த பக்த அடியார்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில் கலைநிகழ்வுகள் மற்றும் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றி













தழ்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

 வாழைச்சேனை - கும்புறுமூலை அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் சிவன் ஆலயத்தில் வருடாவருடம் கலை நிகழ்வுகளும், நான்குசாம விசேட கிரியைகளும், அபிசேகங்களும் விசேட பூசைகளும் சிறப்பாக முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். பூசை நிகழ்வுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.பொன்னுத்துரை சுரேஸ்குமார் சர்மா நிகழ்த்தினார்.


           

SHARE

Author: verified_user

0 Comments: