14 Mar 2022

ஆனந்தகிரி அறப்பணிசபையின் ஏற்பாட்டில் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

ஆனந்தகிரி அறப்பணிசபையின் ஏற்பாட்டில் பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில்  கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய நிலையிலுள்ள மட்/ககு/ பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய  மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  சனிக்கிழமை பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில்  ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்றது.

ஆனந்தகிரி அறப்பணிசபையின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் இப்பாடசாலை அதிபரும், ஆனந்தகிரி அறப்பணி சபையின் கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளருமான ச.வசத்தகுமார், பிரதி அதிபர் த.பஞ்சாட்சரம், ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான ச.சிவலிங்கம், செயலாளர். நே.பிருந்தாபன், உபசெயலாளர் க.செந்தூரன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச இணைப்பாளர் நே.ஜனார்த்தனன், பொதுச்சபை உறுப்பினர்  .ரதீஸ்குமார், பூலாக்காடு - பொண்டுகள்சேனை கிராம உத்தியோகத்தர் .K.குரு மற்றும் மாணவர்களின் பெற்றோர், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கான அனுசரணையினை மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கனடாவில் வசித்துவரும்  ஞானப்பிரகாசம் பிரகாந்தன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையானது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக தனது பணியினை விரிவுபடுத்தி கல்வி அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், வறுமை ஒழிப்பு, இயற்கையை நேசித்தல், கலை கலாசார நிகழ்வுகளை நடாத்துதல் முதலான  செய்றிட்டங்களை மாதம் ஒரு செயற்றிட்டம் எனும் அடிப்படையில்  முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: