14 Mar 2022

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடுத் தெருவில்தான் நிற்கும் - சந்திரகுமார்.

SHARE

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடுத் தெருவில்தான் நிற்கும் - சந்திரகுமார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போகின்றோம் என தெரிவிக்கின்றார்கள். முடியுமானால் வெளியேறிக் காட்டட்டும். போனால் நடுத்தெருவில்தான் நிங்கவேண்டும். இந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கை. என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் .சந்திரகுமார் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாடு பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(13) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

இலங்கை மக்கள் எதுவித வேறுபாடுகளுமின்றி எமது அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழரை முதலமைச்சராக்கியது மகிந்த ராஜபக்சதான். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்துற்கு முட்டுக்கொடுத்தவர்கள் வேறு யாருக்கோ முதலமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுதார்கள். இந்தியாவின் மூலம் மாகாண சபை முறைமை குறிப்பாக தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்தமுறை தமிழரை கிழக்கில் ஆழவிடாமல் இருந்தார்கள். தற்போது நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் வெளிநாடுகளைப் போன்று கொரோனாவால் அதிகபேர் மரணித்திருப்பார்கள். எமது அரசாங்கம் மக்களின் உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றது.

எவர் வந்தாலும் கூச்சலிடலாமே தவிர நாட்டைக் கொண்டு நடாத்த முடியாது. நாட்டைக் கொண்டு நடாத்தக்கூடிய சக்தி மகிந்தராஜபக்சவின் குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது.  நாடு என்பது ஒரு குடும்பம் போன்றதுதான் குடும்பத்தில கஸ்ட்டம் வருபோது பலவிடையங்களை மேற்கொள்வோம். அதுபோன்றுதான் நாட்டையும் கொண்டு நடாத்த வேண்டியுள்ளது. இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது நமது கடமை இந்த அரசாங்கம் இன்னும் 10 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போகின்றோம் என தெரிவிக்கின்றார்கள். முடியுமானால் வெளியேறிக் காட்டட்டும். போனால் நடுத்தெருவில்தான் நிங்கவேண்டும். இந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும்போதுதான் அவர்களுக்கு வாழ்க்கை.. மட்டக்களப்புக்கு அதிகளவு அபிவிருத்திகள் இன்னும் வர இருக்கின்றது. பொதுஜன பெரமுன கட்சியைக் கொண்டு வந்ததன் காரணமாகத்தான் மாவட்டத்திலிருந்து ஒரு அமைச்சரை உருவாக்க முடிந்துள்ளது. அதுபோன்று அரச சார்பான நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க முடிந்துள்ளது. எல்லா நாடுகளிலும் பிரச்சனைகள் உள்ளன. வெளிநாடுகளிலும் 4மடங்கு பொருட்களுக்கு விலைகள் அதிகரித்துள்ளன.

முன்பள்னி ஆசிரியர்களை நிற்சயமாக நிரந்தரமாகக்க வேண்டியுள்ளது. அதனை நிற்சயமாக நான் முன்னின்று செய்து தருவேன். மட்டக்களப்பிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஊடாக இலங்கைளிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நான் நம்புகின்றேன். எமது அரசாங்களம் 58ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது. ஒரு லெட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கிழ் 38ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 24 மைதானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகள் சொல்வதைத்தான் நமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு வருகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு மீற்றர் வீதிகூட போடவில்லை. அவர்கள் நமது மாவட்டத்தையும், புவியியல் தனைமையையும் அறிந்திராதவர்கள். ஜே.வி. கட்சியினால் நமக்கு ஒரு கிணறுகூடக் கட்டித்தரமுடியவில்லை, இவ்வாறானவர்கள் எமது மக்களை அவர்களுக்குச் சாதகமாக மாத்திரம் பயன்படுத்தி வருகின்றார்கள். நாங்கள் இந்த மக்களோடு ஊறிப்போனவர்கள். எனவே எமது மக்களின் பிரச்சனைகளை ஆளும் கட்சியினால் மாத்திரம்தான் எததையும் மேற்கொள்ள முடியும். பாதாளத்திற்குச் சென்ற நாட்டைத்தான் எமது ஜனாதிபதி பொறுப்பேற்று வழிநடாத்தி வருகின்றார்.

இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நாட்டை முன்கொண்டு செல்லலாம்.அதற்காகவேண்டி இளைஞர்களை நாம் எம்முடன் கைகோர்த்து செயற்படுவதற்கு அன்புடன் அழைக்கின்றோம். அதற்குரிய அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நாம் மேற்கொண்டு தருகின்றோம். எதிர்காலத்தில் பட்டிருப்பு தொகுதியில் ஆளும் கட்சி சார்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

  





















SHARE

Author: verified_user

0 Comments: