ஆறுமுகத்தான் குடியிருப்பு வாணி அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு வாணி அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு அறநெறிக்கல்வியை மேம்படுத்தும் முகமாக 100 மாணவர்களுக்கு எமக்காக நாம் அமைப்பின் ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை(20) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
எமக்காக நாம் அமைப்பின் தலைவர் லோ. தீபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் இணைப்பாளர்களான நே.பிருந்தாபன் (இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம், வாழைச்சேனை), மேகராஜ், ஆலயத் தலைவர் தலைவர் லோகிதராஜா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சரியை தொண்டர் அமைப்பின் தலைவர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், வாணி அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment