23 Feb 2022

பிரமாண்டமாக நடைபெற்ற மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின் 125வது ஓராண்டு தொடர் விழாவும்.

SHARE

பிரமாண்டமாக நடைபெற்ற மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழா மற்றும் சுவாமி விவேகானந்தரின் 125வது ஓராண்டு தொடர் விழாவும்.

மண்டூர் இராமகிருஷ்ண மன்றத்தின் தலைவர் கு.ஜதீஸ்குமார் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் இராமகிருஷ்ண திருக்கோயில் திறப்பு விழாவும் கும்பாபிஷேகமும் சுவாமி விவேகானந்தரின் 125வது ஓராண்டு தொடர் விழாவும் செவ்வாய்கிழமை(22) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ், ராமகிருஷ்ண மிஷன கொழும்பு தலைவர் ஸ்ரீமத் சுவாமி  ராஜேஸ்வரானந்தஜி, ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜி மகராஜ்,ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகராஜ், ஆகியோரின் தலைமையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை விஜயம் சுவாமி விவேனானந்தரின் ரத ஊர்வலம் செவ்வாய்கிழமை மாலை மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண மன்றத்தில் இருந்து மாலை 3.00 மணிக்கு ஆரம்பித்து சுவாமி தீர்த்தமாடச் செல்லும் வீதியூடாக மண்டூர் மாரியம்;மன் ஆலயத்தை வந்தடைந்து பின்னர் 6.00 மணியளவில் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்;தை வந்தடைந்தது. பின்னர் அங்கு சுவாமி இராமகிராஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் தொடர்பில்மாஒவர்களால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கா










































தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ், அவர்களால் ஆசியுரையும் இடம்பெற்றது.

செவ்வாய்கிழமையிலிருந்து பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம், இடம்பெற்று, பின்னர் புதன்கிழமை காலை ராமகிருஷ்ண மிஷன கொழும்பு தலைவர் ஸ்ரீமத் சுவாமி  ராஜேஸ்வரானந்தஜி முன்னிலையில், ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகராஜ், அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


SHARE

Author: verified_user

0 Comments: