3 Jan 2022

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் வாகனேரிப் பகுதியில் 91மி.மீ மறைவீழ்ச்சி பதிவு.

SHARE

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் வாகனேரிப் பகுதியில் 91மி.மீ மறைவீழ்ச்சி பதிவு.

வடகீழ் பருவப் பெயற்சி மழை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மார்கழி(2021) மாதத்தில் சற்று ஓய்ந்திருந்த போதிலும், தை முதலாம் திகதியிலிருந்து மீண்டும் மழை பொழியத் துவங்கியுள்ளது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் திங்கட்கிழமை(03) காலை 8.30 மணிவரையில் கடந்த 24மணித்தியாலத்தில் மாவட்டத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மட்டக்களப்பில் 54.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப்பகுதியில், 66.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 27.2மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 70.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கிரான்பகுதியில் 88.2மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 25.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 23.7மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 91.9மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 30.0மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும்,

கடந்த 2011 மார்கழி 31 வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2254.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சு.ரமேஸ் தெரிவித்தார்.

எனினும் மாவட்டத்திலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ளதுடன் பெரிய குளங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பெறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், 31அடி கொள்ளளவுடைய நவகிரிக் குளத்தின் நீர் மட்டம் தற்போது 26அடி 4அங்குலமாகவும், 17அடி 25அங்குலம் கொள்ளளவுடைய தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 15அடி 2அங்குலமாகவும் ஆகவும் உயர்ந்துள்ளது.

அதுபோன்று 33அடி 0அங்குலம் கொள்ளளவுடைய உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 28அடி 3அங்குலமாகவும், 15அடி 8அங்குலம் கொள்ளளவுடைய உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் தற்போது 13அடி 7அங்குலமாகவும், 19அடி 2அங்குலம் கொள்ளளவுடைய வாகனேரிக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 16அடி 8அங்குலமாகவும், 11அடி 6அங்குலம் கொள்ளளவுடைய கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 11அடி 8அங்குலமாகவும், 12அடி 0அங்குலம் கொள்ளளவுடைய கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடி 10அங்குலமாகவும், 15அடி 5அங்குலம் கொள்ளளவுடைய வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் தற்போது 14அடி 0அங்குலமாகவும், 12அடி 6 அங்குலம் கொள்ளளவுடைய வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் தற்போது 11அடி 0அங்குலமாகவும், புணாணை அணைக்கட்டின் நீர்மட்டம் தற்போது 7அடி 7அங்குலமாகவும்; உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல உள்ளுர் வீதிகளிலும், வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் மக்கள் உள்ளுர் போக்குவரத்துக்களிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.















SHARE

Author: verified_user

0 Comments: