14 Dec 2021

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் மொழியில் நடைபெற்ற சாரணர் தலைவர்களுக்கான கலைக்கூறு பயிற்சிநெறி.

SHARE

நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் மொழியில் நடைபெற்ற சாரணர் தலைவர்களுக்கான கலைக்கூறு பயிற்சிநெறி.

நீண்ட கால இடைவெளியின் பின்னர் சாரண தலமையகத்தால் கலைக்கூறு (1V) நான்கு 145 வது பயிற்சிநெறி தமிழ் மொழியில் நுவரேலியாவிலுள்ள பீற்று சாரணர் தலைவர்களுக்கான பயிற்சித் திடலில் அண்மையில் நடாத்தப்பட்டது.

பிரதம சாரண ஆணையாளர் சட்டத்தரணி. ஜனப்பிரித் பெணார்ண்டோ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக தேசிய சாரணர் பயிற்சி ஆணையாளர் நந்த பெணார்ண்டோ அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இப்பயிற்சிநெறி இடம்பெற்றது. இவ்வுயர் சாரண தலைவர்களுக்கான பயிற்சிநெறிக்கு பயிற்சிப் பணிப்பாளராக பரமானந்தம் அஜீத்குமார் அவர்கள் தலைவர் பயிற்றுவிப்பாளராக கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

எமது இலக்கு உயரியதாகவும் விடா முயற்சியும், தளராத தன்னம்பிக்கையும், இருக்குமாயின் குறித்த இலக்கை இலகுவாக எம்மால் அடைய முடியும். இதற்கு ஆதாரம் கேட்டால் நான்தான் அதற்கு ஆதாரம். என்னுடைய தொழிலாக இருந்தாலும் சரி சாரண வாழ்க்கையாக இருந்தாலும் சரி நான் எதை அடைய வேண்டுமென்று நினைத்தேனோ அதை அடைந்துள்ளேன். அது போல் நீங்களும் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என இப்பயிற்சி நெறியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய பயிற்சி ஆணையாளர் நந்த பெணார்ண்டோ இதன்போது தெரிவித்தார்.

இக்குறித்த பயிற்சி நெறியில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து சாரண தலைவர்கள் பங்கு பற்றியிருந்ததோடு தமிழ் மொழி மூலமாக இப்பயிற்சியை நடாத்தியமைக்கு சாரண தலமையகத்திற்கு நன்றியையும் பங்குபற்றுனர்கள் தெரிவித்ததாக உதவி சாரணர் பயிற்சித் தலைவர் .புட்கரன் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: