11 Dec 2021

காவியா சுய பெண்கள் நிறுவனத்தினால் பெண்கள் உரிமைகள் தொடர்பான 16 நாள் செயல்வாத நிகழ்வுகள்.

SHARE

காவியா சுய பெண்கள் நிறுவனத்தினால் பெண்கள் உரிமைகள் தொடர்பான 16 நாள் செயல்வாத நிகழ்வுகள்.

காவியா சுய பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் பெண்கள் உரிமைகள் தொடர்பான நிகழ்வுகள் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை(10)  பிற்பகல் இடம் பெற்றது.

காவியா சுய பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் சுய கூட்டுறவு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் சுயதொழிலாளர்கள் என பலர் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டுடனர்.

இந்நிகழ்வுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வீ ஏபக்ட் (EU & we Effect ) நிறுவனங்களின் அனுசரனை வழங்கியிருந்தன.

இதன்போது> பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான 16 நாட்கள் செயல்வாத நிகழ்வில்> தீபம் ஏற்றுதல்> கைகளில் வெள்ளைப் பட்டி அணியும் நிகழ்வு இடம்பெற்றதையடுத்து> காவியா இளைஞர்களால்" குடும்ப பன்முறைக்கு காரணம் பொருளாதாரமா அல்லது பெண்களா?"  எனும் தலைப்பில் விவாதப் போட்டி இடம் பெற்றது. அதனையடுத்து குறும்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

இதேவேளை 16 நாள் செயல்வாதம் நிகழ்வுகள் சத்துருகொண்டான்> மயிலம்பாவெளி போன்ற இடங்களில் வன்முறையை வெல்லுங்கள்  எனும் கருப்பொருளில் பெண்கள் சிறுமியர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம் எனும் நிகழ்ச்சித் திட்டத்திட்டத்திற்கு அமைவாக விழிப்பூட்டும் வகையில் பொது மக்களுக்குதுண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின்  மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் .லத்தீப் இஸ்ஸதீன் பி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை> பெண்களின் பாதுகாப்பு> மனித உரிமைகள் தெடர்பாக உரையாற்றினார்.







 

SHARE

Author: verified_user

0 Comments: