18 Nov 2021

பிரதேச செயலகத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமணரத்தினதேரர் உத்தியோகஸ்த்தர்களை கடமை செய்யவிடாது ரகளை.

SHARE

பிரதேச செயலகத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமணரத்தினதேரர் உத்தியோகஸ்த்தர்களை கடமை செய்யவிடாது ரகளை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு(பட்டிப்பளை) பிரதேச செலயகத்திற்குள் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் திட்கட்கிழமை(16) திடீரென புகுந்து பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகஸ்த்தர்களை கடடை செய்ய முடியாத அளவிற்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் அறியவருவதாவதுமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பின் மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரததேச யெலகத்திற்கு திங்கட்கிழமை(16) முற்பகல் சுமார் 10.45 மணியளவில் சென்றுள்ளார். அங்கு பிரதேச செயலாளர் இருக்கும் அறைக்கு நேரடியாகச் சென்று அவ்வறையின் தரையிலேயே அமர்ந்துதுள்ளார். இப்பிக்குவின் இந்நடவடிக்கையை உடனே சுதாகரித்துக் கொண்ட பிரதேச செயலாளர் அவருடைய இருக்கையிலிருந்து எழுந்து என்ன விடையம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள்  சாது என குறித்த பிக்குவிடம் வினவியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த பிக்கு மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள பன்சலை அருகில் சிங்கள குடும்பம் ஒன்று வசித்து வருகின்றது.  அக்குடும்பத்தை உடன் அங்கிருந்து அகற்றிவிட்டு அதனைச் சூழவுள்ள காணி தன்னுடையது அதனை உடன் எனக்கு கையளிக்குமாறு பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த இப்பிக்கு கடந்த காலங்களில் அதே பிரதேச செயலகத்தில் பலமுறை பல அடாவடிகைள மேற்கொண்டதைக் கருத்திற் கொண்டு,  இந்நிலைமையை அவதானித்த பிரதேச செயலக ஏனைய அதிகாரிகளும், உத்தியோகஸ்த்தர்களும், பிரதேச செலயாளரின் அறைக்கு உடன் விரைந்துள்ளனர்.

இந்நிலையில் பிற்பகல் ஒரு மணியாகும் வரையிலும், பிக்கு பிரதேச செயலாளரின் அறையிலிருந்து எழும்பவே இல்லை இதனால் பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் தமது அரச கடமையைச் செய்யமுடியாமல் போயிருந்தன. மிக நீண்ட நேரமாகியும் தமது கடமைக்கு இடையூறு விளைவித்துக் கொண்டிருந்த பிக்குவை வெளியேற்ற வேறு வளியின்றி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் உடன் வீதிக்கு வந்து பிரதேச செயலக முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இங்கு பிக்கு வந்து நடந்து கொள்ளும் சம்பவம் குறித்து மண்முனை தென் மேற்கு பிரதேச செயலளார் திருமதி.தி.தட்சணகௌரி அரசாங்க அதிபருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளார். அரசாங்க அதிபர் உடன் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ்  அத்தியட்சகருக்கு இவ்விடையம் குறித்து அறிவித்ததையடுத்து, உதவிப் பொலிஸ் அத்தியட்சகளர் கொண்ட பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று உடன் பிரதேச செயலகத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்துள்ளதோடு, அங்கு பிரதேச செயலாளரின் அறையின் தரையில் அமர்ந்து கொண்டிருந்த பிக்குவுடனும், பிரதேச செயலாளரிடமும் உரையாடியுள்ளனர்.

அதற்கும் செவிசாய்க்காத குறித்த பிக்கு தனது காணி விடையம் தொடர்பில் பிரதேச செயலாளரிடமிருந்து எழுத்து மூலம் பதில் தரவேண்டும் என அடம் பிடித்திருந்துள்ளார். தனது பிரதேச எல்லைக்குபட்பட்ட சிங்கள மக்கள் வாழும் கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள பன்சலை அருகே சிங்கள குடும்பம் ஒன்று அமர்ந்திருக்கும் குறித்த பிக்கு தனக்குரியதாகக் கோரும் காணி வனபரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமானது என அக்காணியை வன பரிபாலனத் திணைக்களம் பிரதேச செயலகத்திற்கு விடுவித்துத் தரும் பட்சத்திலேயே அது தொடர்பில் எம்மால் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் பிக்குவிக்கு கடிதம் வழங்கியுள்ளார். இதன்பின்னர் குறித்த பிக்கு அங்கிருந்து சுமார்  1.45 மணியளவில் பிரதேச செயலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் உத்தியோகஸ்த்தர்களும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டடுள்ளனர்.

எமது பிரதேச செயலகத்தின் கச்சக்கொடி சுவாமி மலை பிராம சேவகர் பிரிவுக்குபட்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் அமைந்துள்ள பன்சலை அமைந்துள்ள பகுதி நுவரகல வன பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளன. அதிலும் சிங்கள மக்கள்  குடியிருந்து வருகின்றார்கள். அவர்களை அகற்றிவிட்டு தருமாறு எம்முடன் பிக்கு கேட்கின்றார். ஆனால் பிக்கு கோரும் அக்காணி எமது கட்டுப்பாட்டில் இல்லை அது வன பாதுபாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது அவர்கள் எமக்கு காணியை விடுவிக்கும் பட்சத்திலேயேதான அது தொடர்பில் நாம் முடிவு எடுக்கலாம் என மண்முனை தென்மேற் பிரதே செயலாளர் திருமதி தி.தட்சணகௌரி தெரிவித்தார்.

குறித்த பிக்கு கடந்த காலங்களிலும் இதே போன்று அதே பிரதேச செயலகத்திற்ச் சென்று பல பிரச்சளைகளையும், சர்சைகளையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.











SHARE

Author: verified_user

0 Comments: