9 Oct 2021

கிராமத்திற்குப் புகுந்த காட்டுயானைக்கூட்டம் பயிர்கள் துவம்சம் மக்கள் அல்லோல கல்லோலம்.

SHARE

கிராமத்திற்குப் புகுந்த காட்டுயானைக்கூட்டம் பயிர்கள் துவம்சம் மக்கள் அல்லோல கல்லோலம்.

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் தும்பங்கேணிப் பகுதயில் வெள்ளிக்கிழமை(08) இரவு புகுந்த காட்டுயானைக் கூட்டத்தினால் அப்பகுதியயைச் சேர்ந்த மக்கள் விடிய விடிய கண்விழித்திருந்து தமது உயிரைக் காப்பாற்றியதாக கவலை தெரிவிக்கின்றனர்.

விடிய விடிய விழித்திருந்து தீப்பற்தம் ஏற்தியும், பட்டாசி கொழுத்தியும், சனிக்கிழமை(09) காலை 6 மணியளவில்தான் கிராமங்களை விட்டு காட்டு யானை வெளியேறியதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டில் நிற்கும் யானைகள் கூட்டமாக தும்பற்கேணி, இளைஞர் விவசாயத்திட்டம், களுமுந்தன்வெளி, உள்ளிட் பல கிராமங்களுக்குள்ளும் புகுந்து அங்குள்ள பயன்தரும், தென்னை, வாழை, மரவள்ளி, மா, உள்ளிட்ட பல பயன்தரும் பயிரினங்களை அழித்து துசம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அபப்குதிவாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மிக நீண்டகாலமாவிருந்து தாம் இந்த காட்டு யானைகளின் தாக்கத்தினாதும், தொல்லைகளினாலும் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் அப்பாவி மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருவதோடு, வாழ்வாதாரமும், குடியிருக்கும் வீடுகளும், அழித்தொழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தமது கிராமத்தை அண்டியுள்ள தளவாய் காட்டில் தரித்து நிற்கும் காட்டுயானைகளை துரத்திக் கொண்டு சரணாலயங்களில் விட்டுவிட்டு யானைகள் உட்புகும் எல்லைகளுடாக கானைப் பாதுகாப்பு மின்சார  வேலையை உடன் அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்த்தின் படுவாங்கரைப் பிரதேசத்தினால் மிக நீண்டகாலமாகவிருந்து காலமாகவிருந்து காட்டு யானைகளின் தெல்லைகளும், அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.













SHARE

Author: verified_user

0 Comments: