1 Aug 2021

மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கு இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE

மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கு இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் மட்டக்களப்பில் உள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை 31.07.2021 மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் சமன் செனவிரெட்ன தலைமையிலான குழுவினரும் மாவட்ட சர்வமதக் குழு அங்கத்தவர்களும் இணைந்து இந்த உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி பிரதேச செயலகம் நொச்சிமுனை கிராம அலுவலர் காரியாலயம் ஆகியவற்றின் பாவனைக்காக தெளி கருவிகள் பாதுகாப்பு அங்கிகள் கைகழுவும் தொட்டி என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில் காத்திரமான பணிகளை ஆற்றியமைக்காக மனித உரிமைகள் சிவில் குழுவுக்கு சுமார் ஒன்றரை இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணினியும் தேசிய சமாதானப் பேரவையினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் கலந்து கொண்டு மடிக்கணினியை வழங்கி வைத்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: