1 Jul 2021

இதுவரையில் உரம் வழங்கப்படாமையால் சிறுபோக விவசாயிகள் அவதி.

SHARE

இதுவரையில் உரம் வழங்கப்படாமையால் சிறுபோக விவசாயிகள் அவதி.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திற்குடப்பட்ட சிறுபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இதுவரையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானி உரம் கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

உரியமுறையில் தமது விவசாய அமைப்பில் அங்கத்துவப் பணம் செலத்தி ஏக்கர் வரிக்குரிய பணம் செலுத்தி உர வகைகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுள்ள போதிலும் இதுவரையில் தமக்கு உரம் வழங்கப்படவில்லை. என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றர்.

கடந்த மே மாதம் முற்பகுதியில் உர வகைகளைப் பெற்றுக் கொள்வதற்கான பற்றுச் சீட்டுக்களைப் பெற்று தற்போது 2 மாதங்களை அண்மித்துள்ள போதிலும் இதுவரையில் கமநல கேந்திர நிலையத்தால் உரம் வழங்கப்படவில்லை, இதனால் இதுவரையில் தமது சிறுபோக வேளாண்மைச் செய்கை உரங்களின்றி, குன்றிப் போயுள்ளதாகவும், இதனால் இவ்வருட சிறுபோக நெற்செய்கையில் பாரிய நட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தமது கமநல கேந்திர நிலையத்த்திற்குட்பட்டு விவசாயிகளுக்கு இதுவரையில் 83 மூடை ரி.எஸ்.பி, 400 மூடை யூறியா, 631 மூடை எம்..பி. உரம் வழங்கவுள்ளதாகவும், இதனை மிகவிரைவில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பழுகாமம் கமநல கேந்திர நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: