19 Jul 2021

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.

SHARE

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சீடா அமைப்பினர் புலமைப்பரிசில் வழங்கி வைப்பு.

களுதாவளை கிராமத்திலிருந்து பல சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் சீடா (SEEDA) எனும் அமைப்பினால் இம்முறை பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தாபரிப்பு புலமைப்பரிசில்களை சனிக்கிழமை(17) வழங்கி வைத்துள்ளனர்.

தற்போது நிலவும் கொரோணா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக மிகக்குறைந்தளவான அழைப்பாளர்களுடன் இடம் பெற்ற நிகழ்விற்கு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய நிருவாகிகளும் சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலனசபைத் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக வணிகத்துறை பீடாதிபதி கலாநிதி .ஜெயராசா, மற்றும் சீடா அமைப்பினர் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வழங்கப்படும், கற்றல் ஊக்குவிப்புக்கள் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் அவர்களது பட்டத்தை நிறைவுசெய்யும்வரை மாதாந்தம் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்படும், அத்துடன் சில மாணவர்களுக்கு சுயதொழில் உதவிகளுக்கும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது பட்டத்தை நிறைவுசெய்வதற்கு பொருளாதாரச் சிக்கல் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதோ இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். என சீடா அமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: