3 Jun 2021

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

SHARE

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு இடையூறுகளைக்குள் சேவைகளை மேற்கொண்டு வரும் தாதிர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை(03) நண்பகல் 12 மணிமுதல் ஒரு மணிவரையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்து பணிபுரியும், தாதியர்கள், சுகாதார ஊத்தியோகஸ்த்தர்கள் இதன்போது பதாகைகளை எந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

அந்தவகையில் ஊழியர்களுக்காகவும் விசேட கொடுப்பனவை வழங்குதல், பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் விசேட விடுமுறை வழங்குதல், அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விசேட விடுமுறை நாளில் கடமைக்கு சமூகமளிக்கும் ஊழியர்களுக்கு விடுமுறை நாள் கொடுப்பனவு வழங்குதல், கொவிட் -19 தடுப்பு செயற்திட்டத்தை வலுப்படுத்துவதற்காக சுகாதாரச் சேவை பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில்

தொழிற்ச் சங்க குழுவொன்று நியமித்தல் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு அவசியமாகும் போது அதற்கு சுகாதாரச் செயலாளரின் ஒத்துழைப்பினை வழங்குதல்,

வைத்தியசாலை கொவிட் குழுவிற்காக தொழிற்சங்க பிரதிநிதிகளை நியமித்தல் மற்றும் தொழிற்சங்க பங்குப்பற்றுதலுடன் வைத்தியசாலை ஆலோசனை குழு மீண்டும் நடைமுறைப்படுத்தல், பதிலீட்டு அமைய சுகாதார உழியர்களை நிரந்தரமாக்குதல், அனைத்து சுகாதார ஊழியர்களையும் ஆட்சேர்ப்பு செய்தல், வெற்றிடங்களை நிரப்புதல் விரைவாக மேற்கொள்ளல், பதிலீட்டு, அமைய சுகாதார உழியர்களுக்கு விசேட விடுமுறை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் நாளாந்த சம்பளத்தினை செலுத்துதல்,

தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக என் 95 முகக் கவசம், பாதுகாப்பான உடை ஆகிய வசதிகளை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்குதல், பொது நிர்வாக சுற்றறிக்கையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதன் படி மகப்பேறு சுகாதார ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குதல், அனைத்து ஊழியர்களுக்கும் செலுத்துகின்ற மேலதிக நேரக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, அழைப்பு கொடுப்பனவு வரையறைகளை நீக்குதல்.

அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதியினை முறையாக மற்றும் இலவசமாக வழங்குதல், சுகாதார ஊழியர்களுக்கு கொவிட் -19 தொற்று ஏற்படும் போது சிகிச்சை வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான முறையான முறையொன்றினை தயாரித்தல். கடமைக்கு சமூகமளிப்பதற்கு விசேட இடையூறுகள் உள்ள ஊழியர்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் சுகாதார நிலையமொன்றில் கடமையாற்ற இடமளித்தல்,

கொவிட் -19 கடமையினை மேற்கொள்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் முறையாக உணவு வழங்குதல் மற்றும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்களில் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் உணவு வழங்குவதற்காக முறையான சலுகை செயற்திட்ட மொன்றினை நிறுவுதல். உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிது கொண்டார்.












SHARE

Author: verified_user

0 Comments: