21 Jun 2021

கொரோனோ தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேரூந்து பிக்கப் ஒன்றுடன் மோதுண்டு பெரியகல்லாற்றில் விபத்து.

SHARE

கொரோனோ தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேரூந்து பிக்கப் ஒன்றுடன் மோதுண்டு பெரியகல்லாற்றில் விபத்து.

கம்பஹா மாவட்டத்திலிருந்து  ஒரு தொகுதி கொரோனோ தொற்றுக்குள்ளானவர்களை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியால் அம்பாறைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து பெரியகல்லாறு பிரதான வீதியில் எதிரே வந்த அரச திணைக்கள  பிக்கப் ஒன்றுடன் மோதி விபத்துள்ளானதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரித்தனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதான வீதியில் இச்சம்பவம் திங்கட்கிழமை(21) இடம்பெற்றுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 27 கொரோனோ நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சிசிச்சை அளிப்பதற்கு இராணுவத்தின் பாதுகாப்புடன்  கொண்டு சென்ற தனியார் பேரூந்து கரையோர நீர்வாழ் உயிரினவளர்ப்பு திணைக்களத்தின்  மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளரை  கல்முனையிலிருந்து ஏற்றிக்கொண்டு சென்ற பிக்கப்புடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் தனியார் பேரூந்தும், மற்றும் திணைக்கள பிக்கப் வாகனமும் பகுதியளவில் சேதமேற்பட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்த எந்தவொரு நபருக்கோ, கோரோனோ நோயாளிகளுக்கோ சிறுகாயம் ஏற்படவில்லை என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.










SHARE

Author: verified_user

0 Comments: