1 Jun 2021

கடமை நேரத்தில் சுகாதார அதிகாரியை அச்சுறுத்திய நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசில் முறைப்பாடு—ஜனாதிபதி சுகாதார பணிப்பாளருக்கும் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தல்.

SHARE

கடமை நேரத்தில் சுகாதார அதிகாரியை அச்சுறுத்திய நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசில் முறைப்பாடு—ஜனாதிபதி சுகாதார பணிப்பாளருக்கும் தகாத  வார்த்தைகளால் அச்சுறுத்தல்.

கொரோனா மூன்றாம் அலை மிக வேகமாகப் பரவி வரும் இன்றைய நிலையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தமது உயிரைக் கூட பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரை தொலைபேசியூடாக மிகக்கடுமையான அச்சுறுத்திய சம்பவமொன்று மட்டக்களப்பு ஆரையம்பதி சுகதார வைத்தியதிகாரி பிரிவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த நபர் மாவட்ட சுகாதார பணிப்பாளர் டாக்டர் என்.மயூரன் மற்றும் ஜனாதிபதியையும் கடுமையான தூசன வார்த்தைகளால் எச்சரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அச்சுறுத்தலுக்குள்ளான ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் கந்தசாமி ஜெய்சங்கர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன்,  தனக்கு விடுக்கப்பட்டுள்ள  உயிர் அச்சுறுத்தலிலிருந்து  பாது காக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் அகில இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் என்பவற்றைக் கோரியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் குறித்த தொலைபேசியில் அச்சுறுத்திய நபரின் உறவினர் ஒருவரின் வீட்டில் தனிமைப்படுத்தல் பிரசுரம் ஒட்டியதற்காகவே இவ்வாறு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: