22 May 2021

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தால் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் சம்மந்தமான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வினியோகம்.

SHARE

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தால் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் சம்மந்தமான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வினியோகம்.

களுவாஞ்சிகுடி வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்களுக்கு களுவாஞ்சிகுடி பொலிசாரால் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் சம்மந்தமான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை(21) வழங்கி வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருவதன் காரணத்தால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்,

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வருகைதருகின்ற நபர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும், இவர்கள் தொடர்பான தகவல் கிடைப்பதாயின் உடனடியாக கிராம சேவை உத்தியோகஸ்த்தர், அல்லது பொதுசுகாதார பரிசோதகர், அல்லது பெரிசாரை தொடர்பு கொள்ளவும்.

பொதுமக்கள் மவழிபாட்டுத் தலங்களில் ஒன்றிணைந்து மத வழிபாடுகளில் ஈடுபடல் திருமண நிகழ்வுகள், பிறந்த நாள் நிகழ்வுகள், மரணச் சடங்குகள், ஏனைய விழாக்கள் என்பவற்றில் ஈடுபடல் தடை செய்யப்பட்டுள்ளது.

முகக் கவசங்கள் கையுறை என்பவற்றைப் பாவிப்பதுடன் பொது சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்கவும்.

பொதுமக்கள் முக்கிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம், மேலும் எந்தவொரு சந்தர்ப்பதிலும், சமூக இடைவெளியைப் பேணவும்.

அரச தனியார் திணைக்களங்கள் பொது இடங்கள் வர்த்தக நிலையங்கள், என்பவற்றில் சுகாதர விதிமுறைகளை கடைப்பிடிக்கவும்.

கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்தியர் அல்லது பொதுசுகாதார பரிசோதகர் அல்லது பொலிசாரைத் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு : - முகக் கவசங்கள், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து வருகை தருகின்ற நபர்களுக்கு தங்குமிடவசதிகள் வழங்குகின்ற நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.





SHARE

Author: verified_user

0 Comments: