8 Apr 2021

மட்டக்களப்பின் திரைத்துறையில் மற்றுமொரு படைப்பு - ”தளராதவன்”

SHARE

”மட்டக்களப்பு  சினிமா தனித்துவ அடையாளங்களுடன் வளர வேண்டும் - அது வர்த்தக சினிமாவாகவும் மலர வேண்டும்” அந்த முயற்சியின் தூர நோக்கிய சிந்தனையில் தூர நோக்கில் பயணிக்கும் ”Visual Art Movies” நிறுவனத்தின் அடுத்து வரவிருக்கும் படைப்பு ”தளராதவன்”
இதன் வெளீயீட்டு நிகழ்வு ஏதிர்வரும் 10/04/2021 திகதி மாங்காடு கிவேஷ் திரையரங்கில் பி.ப 5 மணிக்கு மிகவும் கோலாகலமாக வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஊடாக  மட்டக்களப்பைச் சேர்ந்த 12 புதுமுக நடிகர்/நடிகைகளையும், சில தொழில்நுட்பவியலாளர்களையும் இப்படத்தின்மூலம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன் மட்டக்களப்பு மக்களின் அமோக வரவேற்பினை பெற்ற ஒரு திரை கதையாகவும், இலங்கையின் அனைவரது பேசுபொருளாகவும் அமையும் சமூகத்தின் வலுவான திரைக்கதையொன்றினை இயக்குனர் இந்த திரை படைப்பின் ஊடாக வெளிக் கொணர்ந்து சமூக மாற்றத்தின் புதிய அத்தியாயம் ஒன்றிற்கு அடித்தளமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவு - புஸ்பகாந்த், எடிட் - விஷ்ணுஜன்,

டப்பிங்  - Re sound records தினேஷ், நா 

ஸ்டில்ஸ் -  தினுஷாந்,

சிகை அலங்காரம் -  கண்ணன்,

ஒப்பனை - ஷாலினி, போஸ்டர் -  டுஜா, தயாரிப்பு மேற்பார்வை -  ஜனிதன், இசை, ஒலிக்கலவை, sfx  - கேஷாந்த், துணை இயக்குநர்கள் -  ஷரோஷ், ஸ்டெபான், கதை, வசனம் -  முரளிதரன், தயாரிப்பு - Visual Art Movies முரளிதரன் & சுரேந்திரன் 

திரைக்கதை, இயக்கம் - கோடீஸ்வரன். 

நடிகர்கள் - பவித்திரன் | கிர்ஷாந்தா | சிறோனியா | நிலு | டுஜா | கிஸ்கந்தமுதலி |சுரேந்திரன் | முரளிதரன் | சிந்துஜன் | சுலக்ஷன் | ஆனந்தி | தி்க்ஷனன் | அனுஷாந் | கண்ணன் | நிலக்ஷி | சாம்பசிவம்

என மட்டக்களப்பின் பல புதிய முகங்கள் தங்கள் திறமையினை வெளிப்படுத்தி இருப்பதுடன். மூன்று பாடல்களையும் கொண்டதாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளமை மட்டக்களப்பின் திரைத்துறையில் மற்றுமொரு மகத்தான வெற்றியாக  அமையுமென ரசியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: