2 Apr 2021

உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்.

SHARE

உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்.

உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் காரியாலயத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை இதன்போது கொண்டு தமது முன்மொழிவுகளை முன்வைத்தனர். அந்தவகையில் விஷேடமாக திண்மக்கழிவு முகாமைத்துவம், வடிகான் அமைப்பு, பொது மலசல கூடம் அமைத்தல், வைத்தியசாலைகளை விருத்தி செய்தல், உள்ளுர் வீதிகளை புனரமைத்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களை முன் வைத்து கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கின்ற குறித்தபிரதேச சபைகள் அனைத்திற்குமான பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதற்கு தாம் தயாராக உள்ளதாக பொது நிருவாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சினுடைய இராஜாங்க அமைச்சின் செயலாளர்  இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு பிரதேச மண்முனைப்பற்று பிரதேச சபைகளின் தவிசாளர்கள்பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பொது நிர்வாக மாகண சபைகள் உள்ளுராட்சி அமைச்சினுடைய இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: