8 Apr 2021

பொது இடங்களில் வீசப்படும் முகக்கவசங்களால் மக்களும் விலங்குகளும் பெரும் பாதிப்பு.

SHARE

பொது இடங்களில் வீசப்படும் முகக்கவசங்களால் மக்களும் விலங்குகளும் பெரும் பாதிப்பு.

பொது இடங்களில் வீசப்படும் முகக்கவசங்களால் மக்களும் விலங்குகளும் பெரும் பாதிப்பு மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம்

சுகாதார வைத்திய அதிகாரி. இவ்விடையம் குறித்து வைத்தியரிடம் வியாழக்கிழமை (08) வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

கொரோ தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க முகக் கவசங்களை அணிவது சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிகின்றோம்.

ஆனால் அவ்வாறு அணிகின்ற முகக் கவசங்களை முறைப்படி அகற்றுகின்றோமா என்றால் அதுதான் கேள்விக்குறி.

அவ்வாறு அகற்றப்படாமல் வீதிகளிலும் பொது இடங்களிலும் வீசிவிட்டுச் செல்லும் முகக்கவசங்களால் பொதுமக்களும் விலங்களும் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் சுற்றாடலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியகலாநிதி .உதயகுமார் தெரிவித்தார்.

குறித்த வீசப்படும் முகக் கவசங்களிலுள்ள வைரஸ்கள் ஒருவாரம் வரை உயிர்வாழும் தன்மை கொண்டது.அவைகளால் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் ஏன் விலங்கினங்களும் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: